அலகு குத்தி மயில் தோகை போல் காட்சியளித்த பக்தர்
குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தைப்பூசத்தை முன்னிட்டு உடல் முழுவதும் 51 வேல்களை அலகு குத்தி மயில் தோகை போல் காட்சியளித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 09:13 GMT
அலகு குத்தி மயில் தோகை போல் காட்சியளித்த பக்தர்
நெல்லை மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று இரவு தைப்பூசத்தை முன்னிட்டு உடல் முழுவதும் 51 வேல்களை அலகு குத்தி மயில் தோகை போல் காட்சியளித்தார். பின்னர் வாகனத்தின் முன்பகுதியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து திருச்செந்தூர் முருகனை காண யாத்திரையாக சென்றார். பக்தர் இந்த பறவை காவடி எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.