சிறுவனுக்கு எலக்ட்ரிக் சக்கர நாற்காலி வழங்கிய திமுக நிர்வாகி!
சோளிங்கரைச் சேர்ந்த சிறுவனுக்கு எலக்ட்ரிக் சக்கர நாற்காலியை திமுக நிர்வாகி பெரியசாமி வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 07:29 GMT
எலக்ட்ரிக் சக்கர நாற்காலி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம், வாங்கூர் ஊராட்சி நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (வயது 12) என்ற சிறுவன் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். ஒரு காலை இழந்த சிறுவன் ஜீவாவின் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமியின் கணவரும், சோளிங்கர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான எஸ்.பெரியசாமி, சிறுவனுக்கு எலக்ட்ரிக் சக்கர நாற்காலியை தனது சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.அதற்கு சிறுவனின் பெற்றோர், பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.