ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தற்கொலை

பாலக்கோடு அருகே மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்ததை எடுத்து விவசாயி தற்கொலை காவல் துறையினர் விசாரணை.

Update: 2024-03-25 01:20 GMT

காவல்துறை விசாரணை


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பாலக்கோடு வட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ இவருக்கு வயது 55 விவசாயி. இவருடைய மனைவி சாலம்மாள். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.இதற்கிடையே ராஜீக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோய்வாய்ப்பட்ட அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். மது குடிப்பதை நிறுத்துமாறு சாலம்மாள் கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால மன வேதனையடைந்த ராஜீ நேற்று மாட்டு கொட்டகையில் தான் கட்டியிருந்த வேட் டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு காவல்துறையினர் ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News