12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா

போடிநாயக்கனூரில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பெரிய கும்பிடு திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-22 09:37 GMT
போடிநாயக்கனூரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம் 120 ஆண்டுகளுக்கு முன்பு பழைமை வாய்ந்த ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பெரிய கும்பிடு திருவிழாவில் வெள்ளைக் குதிரையில் ஊர்வலமாக கொண்டு வரப்படும் கத்தியை அருளுடன் சுமந்து வரும் குதிரை. ஆலயத்திற்குள் நுழையாமல் வாசலில் நிற்கும் குதிரையை அழுது வேண்டி ஆலயத்திற்கு கருவறை வரை அழைத்து வந்த குழந்தைகள். கொண்டுவரப்பட்ட கத்தியை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்யும் அதிசயம். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் சிறப்பு வழிபாடு. ஆலயத்திற்குள் குதிரை நுழைந்து அம்மன் பாதத்திற்கு கத்தி கொண்டுசெல்லும் வரை பெண்களுக்கு அனுமதி மறுத்து ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு பூஜை. அம்மன் அருள் பெற்ற கத்தி ஆலயத்திற்கு முறையும் பொழுது பெண்களுக்கு அருள் வந்தால் அம்மன் வாசலிலேயே நின்று விடும் என்ற நம்பிக்கையில் ஆலயத்திற்குள் கத்தி வந்த பின்பு பெண்களுக்கு அனுமதி. நிகழ்ச்சி நிறைவில் கோவில் முன்பாக நெருப்பு வளையத்தில் பக்தர்கள் பந்தக்கத்தி ஆட்டம் நடைபெற்றது. நெருப்பால் வளையம் அமைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் நெருப்பு கத்தியுடன் பந்தக்கத்தி ஆட்டம் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News