பரமத்திவேலூரில் வானக தணிக்கையில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் அபராதம்
பரமத்தி வேலூரில் வாகன தணிக்கையின் போது ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.;
பரமத்திவேலூரில் வானக தணிக்கையில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் அபராதம்
நாமக்கல் மாவட்ட போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலை பாதுகாப்பு ஆனையர் உத்தரவின் பேரில் பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் பரமத்தி வேலூர் பகுதிகளில் சனிக்கிழமை சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளை தடுத்தி நிறுத்தி சோதனை மேற்கொண்டர். சோதனையில் லாரிகளுக்கு உரிய ஆவனங்களின்றி இயக்கியதும் அதிக பாரம் ஏற்றிவந்தும் தெரிய வந்தது.
அந்த வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டர். மேலும் இது போன்று தவறுகள் தொடர்ந்தால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த வாகன தனிக்கை மேலும் தொடரும் என பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தெரிவித்தார்.