குப்பை கிடங்கில் தீ விபத்து!
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கோழிக்கால் நத்தம் சாலை, செங்கோடம்பாளையம் வார்டு 5, நுண் உரமாக்கும் மைய வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, குப்பை கிடங்கினை ஆய்வு மேற்கொண்டு, குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள பொதுமக்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சை வழங்கவும், குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாமினை அமைத்து சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து முறையான அறிக்கை சமர்ப்பிக்கவும், குப்பை கிடங்கை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திடவும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி வார்டு 5 நெசவாளர் காலனியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, உத்தரவிட்டார்.