சரக்கு ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு

சங்ககிரியில் சரக்கு ரயில் பெட்டிகள் ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-13 16:28 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீரென தீ பற்றி புகைமூட்டம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு.... கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு கடந்த மாதம் 26ம் தேதி சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு பெட்டி மட்டும் பழுது காரணமாக சங்ககிரி ரயில்வே நிலையம் அருகே ரயில்கள் நிறுத்தும் பாதையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி பெட்டியில் திடீரென தீ பற்றி புகைமூட்டம் காணப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே துறையினர்.சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ரயில் பெட்டி நிறுத்தப்பட்ட பாதையில் மேலே செல்லும் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தடை செய்த பின்னர்.ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து புகைமூட்டங்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பின்னர் உயர் மின்னழுத்த மின்னோட்டம் செலுத்தப்பட்டது. மேலும் பயணிகள் செல்லும் ரயில்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன. இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் பழுதாகி நின்ற நிலக்கரி சரக்கு பெட்டியில் வெயிலின் காரணமாக தானாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்செம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News