பெரிய கம்பியம்பட்டில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

பெரிய கம்பியம்பட்டு பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் திடீரென தீ பிடித்ததால் ரூ. 5 லட்சம் பொருட்கள் தீயில் கருகிய நாசமனது.;

Update: 2024-04-26 15:36 GMT

தீப்பற்றி எரியும் குடோன்

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கம்பியம்பட்டு பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் திடீரென தீ பிடித்ததால் ரூபாய் 5 லட்சம் பொருட்கள் தீயில் கருகிய நாசம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்பியம்பட்டு மேல் முஸ்லிம் தெருவில்,

முனாப் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இம்தியாஸ் (வயது 47) என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதனை பிரித்து எடுத்தும் மற்றும் அதனை இயந்திரத்தில் உருக்கி கர்நாடக மாநில மாநில பெங்களூருக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் சாலையோரம் உள்ள குப்பையை மர்ம ஆசாமிகள் தீ வைத்து உள்ளனர்.

Advertisement

இதனால் தீ மளமளவென எரிந்து அருகில் பூட்டி கிடக்கும் பழைய பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் தீ காற்றில் பறந்து தீ பற்றிக் கொண்டு மளமளவென எரிந்தது இது குறித்து தகவல் அறிந்ததும் இம்தியாஸ் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

   தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதும் அனணத்தனர் இதனால் சேமிப்பு கிடங்கில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகிய நாசமானது பழைய பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊழியர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News