நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தீ விபத்து!!
சென்னை கொடுங்கையூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ஏசி இயந்திரத்தில் உண்டான மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.;
By : King 24x7 Desk
Update: 2024-07-11 04:25 GMT
Kodunkaiyur Govt Urban Primary Health Center
சென்னை கொடுங்கையூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ஏசி இயந்திரத்தில் உண்டான மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பிற்பகலில் மருத்துவமனை ஊழியர்கள் அமரும் பகுதியில் கரும்புகையுடன் தீ பரவத் தொடங்கியதும், ஊழியர்களும் நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.