சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி தூக்கிலிட்டு தற்கொலை

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-29 09:02 GMT
சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி தூக்கிலிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடமலாபுரம் அண்ணாகாலனியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி தவசி (62) தவசி கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தவசியின் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர்.இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவசி வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News