அரசு பள்ளியில் பள்ளி மாணவிகளிடையே உணவு திருவிழா !
போச்சம்பள்ளி அடுத்த கெங்கி நாயக்கன்பட்டி அரசு பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே உணவுத் திருவிழா இன்று நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-19 11:17 GMT
போச்சம்பள்ளி அடுத்த கெங்கி நாயக்கன்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மாணவிகளிடையே உணவு திருவிழா : ஆர்வமுடன் அனைத்து வகை உணவுகளையும் கொண்டு வந்து அசத்திய பள்ளி மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி அருகே உள்ள கெங்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே உணவுத் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் பழமையான உணவுகளான கேழ்வரகு கூழ், கேழ்வரகு களி, சிறு தானிய வகைகளில் உள்ள உணவு வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகள் என பழமையான உணவுகள் பலகாரங்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உள்ள அனைத்து வகை உணவுகளும், லெமன் ஜுஸ், நன்னாரி ஜுஸ் உள்ளிட்ட ஜுஸ் வகைகள் இந்த உணவு திருவிழாவில் நடைபெற்றன. இந்த திருவிழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி கலந்து கொண்டு மாணவர்களின் உணவு வகைகளை உண்டு ரசித்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகள் வழங்கினர். மேலும் மாணவர்களின் உணவு முறைகள் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்து ஆசிரியர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள் வகைவகையான அசத்தலான உணவுகளை கொண்டு வந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இதில் ஆசிரியர்கள் ஷீலா, கோமதி, வெங்கட்டம்மா, அமுதவல்லி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா நினைவில் உதவி தலைமை ஆசிரியர் சகிலா பானு நன்றி தெரிவித்தார்.