பூரி சாப்பிட்ட நான்கு வயது சிறுமி பலி?
எருமப்பட்டி அருகே பூரி சாப்பிட்ட நான்கு வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
எருமப்பட்டி ஜனவரி 20 எருமப்பட்டி அருகே உள்ள முட்டாள் செட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கிருஷ்ணன் வயது 44 இவருக்கு அபினேஷ்வர் என்ற மகனும் ஹர்ஷிகா என்ற நான்கு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் 17ம் தேதி இரவு இவரது மகள் ஹர்ஷிகா பூரி சாப்பிட்டு அரை மணி நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
அதன் பிறகு தூங்கிவிட்டதாகவும் பதினெட்டாம் தேதி காலை மீண்டும் வாந்தி எடுத்ததாகவும் உடனே எருமைப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கூட்டி சென்று சிகிச்சை எடுத்து விட்டு மீண்டும் அன்று இரவு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே எருமப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்