லாரி டிரைவரை தாக்கி பணம் செல்போன் பறித்த 5 பேர் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம், கல்லுக்கூட்டம் லாரி டிரைவரை தாக்கி பணம் செல்போன் பறித்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-14 11:59 GMT

லாரி டிரைவரை தாக்கி பணம் செல்போன் பறித்த 5 பேர் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் வில்பிரட்ஜான் (57).இவரது மகன் ஜெப்ரி ஜான் (28). இவர் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார். சம்பவ தினம் காலையில் தந்தையும் மகனும் லாரியில் சர்க்கரை மூடைகளை ஏற்றி இறக்குவதற்காக திங்கள் சந்தை பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு ஒரு தனியார் ஏஜென்சி குடோன் முன்பு லாரியை மறுத்தி நிறுத்தினார். அப்போது அங்கு மூடைகளை இறக்க அதே பகுதியை சேர்ந்த சமீர், அஜய் உட்பட சிலர் வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சமீர், வில்பிரட் ஜானை கீழே தள்ளி விட்டுள்ளார். இதை ஜெப்ரி ஜான் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதை அடுத்து ஜெப்ரி ஜான் திங்கள் சந்தையில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனாலும் பின்னாலேயே 2 பைக்கில் சமீர், அஜய் உட்பட ஐந்து பேர் துரத்தி சென்றனர். சாமியார்மடம் பகுதியில் வைத்து ஐந்து பேரும் சேர்ந்து ஜெப்ரிஜானை தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவரிடம் இருந்த செல்போன், ரூபாய் 20 ஆயிரத்து 340 போன்றவற்றை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஜெப்ரி ஜான் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சமீர், அஜய் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News