டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்ட சிறுமி
டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்ட 10 வயது சிறுமியை ஒரு வாரம் போராடி காப்பாற்றிய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்.
Update: 2024-02-02 10:40 GMT
டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்ட 10 வயது சிறுமியை ஒரு வாரம் போராடி காப்பாற்றிய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 5000ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கி சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த ஞானமூர்த்தி ஈஸ்வரி தம்பதியினர் இவர்களது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் 10 வயது சிறுமி மோகனா ஶ்ரீக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி திடீரென காய்ச்சலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தேனி மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை கையில் உள்ள பணத்தை எல்லாம் செலவு செய்த பின்பு மீண்டும் சொந்த ஊரான சின்னமனூர் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிறுமியை பெற்றோர்கள் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்தமாதம் 23 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர் இதையடுத்து கடந்த 23 ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமி முழுகுணம் அடைந்து கடந்த 30 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர்கள் இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் பாலசங்கர் மற்றும் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஞானமூர்த்தி ஈஸ்வரி தம்பதிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் செயற்கை சுவாசக் கருவிகள் , ரத்த அழுத்த பரிசோதனை கருவி , ரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் கருவி , ஆவி பிடிக்கும் கருவி உள்ளிட்ட ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வாங்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இலவசமாக அளித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.