சங்கரன்கோவிலில் டிஜிட்டல் பேனர் போர்த்தி சுற்று திரியும் அரசு பேருந்து !

டிஜிட்டல் பேனர் போர்த்தி சுற்று திரியும் அரசு பேருந்து மீது குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2024-06-25 05:23 GMT
 அரசு பேருந்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது காலை மாலை என இருவேளைகளிலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையானது பெய்து வருகிறது. அரசு பேருந்துகளில் மேற்கூரையில் இருந்து மழை நீர் உள்ளே புகாமல் இருக்க பேருந்தின் மேற்பகுதியில் டார்ஷீட் ஒட்டப்படுவது வழக்கம் ஆனால் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 34 B வழித்தடம் கொண்ட பேருந்து சங்கரன்கோவில் இருந்து ராயகிரிக்கு இயக்கப்பட்டு வருகிறது இந்தப் பேருந்து சங்கரன் கோவில் கரிவலம் துரைச்சாமிபுரம் வழியாக ராயகிரிக்கும் நாள்தோறும் இரு முறை சிவகிரிக்கும் சென்று வருகிறது குறிப்பாக பள்ளி கல்லூரி நேரங்களில் மாணவ மாணவியர்களை ஏற்றி செல்வதற்காக இந்த பேருந்து குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் பேருந்தின் மேற்கூரையில் தார்ஷீட் ஒட்டப்படாமல் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் பிளக்ஸ் பேனர் கொண்டு பேருந்தின் மேற்கூரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. பேருந்தின் பின்பகுதியில் பிளக்ஸ்பேனர் பெயர்ந்து காற்றில் ஆடிய வண்ணம் உள்ளது பேருந்து வேகமாக செல்லும்போது பிளக்ஸ் பேனர் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பெயர்ந்து காற்றில் பறக்கக்கூடிய சூழல் உருவானால் பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்க கூடிய அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த பேருந்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியமான செயலால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்தின் மேற்கூரையில் ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்றி முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News