ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கிய முகநூல் நண்பர்கள் குழு
போர்வை;
Update: 2023-11-30 01:09 GMT
போர்வை வழங்குதல்
நெல்லை மாநகரில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் சாலைகளில் உள்ள ஆதரவற்றோருக்கு நேற்று நள்ளிரவு போர்வைகள் வழங்கப்பட்டது. இந்த பணியில் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தலைமையில் மேலப்பாளையம் அஜித், கொண்டாநகரம் சிமியோன், கொண்டாநகரம் ஜெபராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.