எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர மன்ற தலைவர் இடையே கடும் வாக்குவாதத்திற்கு பிறகு 84 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

Update: 2024-02-29 16:34 GMT

நகராட்சி கூட்டம்

எடப்பாடி நகராட்சியில் நடைபெற்ற . சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியிலுள்ள கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் திமுகவைச் சேர்ந்த  நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக நகர மன்ற குழு தலைவர் முருகன் தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து மன்ற கூட்டத்தில்  விவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது 12 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி தனது வார்டில் உள்ள மயானத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெண்டர் விடப்படாத மரங்களையும் வெட்டி சென்றுள்ளதாக கூறிய போது  நகர் மன்ற தலைவர் பாஷாவிற்கும், அதிமுக கவுன்சிலர் ரவிக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது.  தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முஸ்தபா

அனைவரையும் சமாதானம் செய்ததை தொடர்ந்து அஜந்தா வாசிக்கப்பட்டு 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே அதிமுக நகர மன்ற உறுப்பினர்களுக்கும் திமுகவைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் பாஷாவிற்கும் நகர்மன்ற கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் நிலவியதால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...

Tags:    

Similar News