ஒரு கிலோ பூண்டு 350 முதல் 400 ரூபாய்க்கு விற்பனை..
இரண்டு நாட்களில் 300 குறைய வாய்ப்பு.
Update: 2024-02-14 06:41 GMT
அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு கொண்டு வரப்படுகிறது. மேற்கண்ட பகுதியில் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பூண்டு வரத்து குறைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால் பொது மக்கள் மிகவும் கடும் வேதனை அடைந்தனர். இந்நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10 வாகனங்களில் இருந்து, 200 டன் பூண்டுகள் வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு கிலோ பூண்டு 300 முதல் 400 ரூபாய் வரை பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.