நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை !!

கடன் தொகையை நாகராஜன் திருப்பி செலுத்த முடியாததாலும், மனம் உடைந்த வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2024-05-29 07:20 GMT

 தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல்  - பார்வதிபுரம் இடைப்பட்ட ரயில்வே துணை தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 26 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்  சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் அவர் அருகே செல்போனும் பாதி உடல் நிலையில் கிடந்தது. அதில் கடைசியாக பேசிய நம்பரை வைத்து போலீசார் விசாரணை தொடங்கியபோது, இறந்தவர் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதி சேர்ந்த நாகராஜன் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மேலும் நடத்திய விசாரணையில், இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நசரேத் என்பதும், பெயிண்டிங் வேலை செய்து வந்த நாகராஜன் 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டதும்,  இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் அதிக  கடன் வாங்கி இருந்ததால் கடன் தொகையை நாகராஜன் திருப்பி செலுத்த முடியாததாலும், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.         நாகர்கோவில் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News