வீட்டிற்கு சாப்பிட வந்த கூலித்தொழிலாளி லாரி மோதி பலி
குமாரபாளையம் அருகே வீட்டிற்கு சாப்பிட வந்த கூலித்தொழிலாளி லாரி மோதி பலியானார்.;
Update: 2024-03-06 06:45 GMT
லாரி மோதி பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் பிரபுதாஸ், 42. கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணியளவில் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு செல்ல சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு தனியார் ஓட்டல் கடை அருகில் சாலையை நடந்து கடந்து வந்தார். சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த பதிவு எண் தெரியாத லாரி இவர் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வழியில் இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து இவரது தாயார் லட்சுமி, 70, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.