ஊதியூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி சட்ட கல்லூரி மாணவன் பலி

ஊதியூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சட்ட கல்லூரி மாணவன் பலியானார்.மேலும் காரில் வந்த அனைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதி விபத்து குறித்து ஊதியூர் காவல் துறை விசாரணை.

Update: 2024-04-14 16:09 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சட்ட‌ படிப்பு படித்து வரும் கல்லூரி மாணவன் உயிரிழந்தது காங்கேயம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை, வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 35. இவரது மனைவி நந்தினி வயது 30. இவரது மகன் தேவ் பிரனீத் வயது 2. சரவணன் விவசாயம் தொழில் செய்து கொண்டு வருகிறார். இவர் கடந்த வாரம் புதன்கிழமை பழனிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். இவர்களுடன் இவர்களது உறவினர்கள் இந்துமதி வயது 26, திவித் வயது 6 மற்றும் சரவணன் பேஸ்புக் நண்பரும், திருப்பூரிலுள்ள தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரவீன் வயது‌ 21ம் உடன் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த வாரம் புதன்கிழமை பழனிமலை பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் வீடு திரும்பி சரவணனுக்கு சொந்தமான காரிலும், காரை சரவணன் ஓட்டி வந்ததாகவும், ஓட்டுநர் இருக்கை அருகே பிரவீன் அமர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊதியூர் அருகே நந்தமேடு என்ற பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது சரவணனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் விபத்துக்குள்ளான அனைவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் உடன் சென்ற சரவணன், நந்தினி, தேவ் பிரனீத், இந்துமதி, திவித் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News