சங்காகிரியில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஆம்புலன்சில் வந்து வாக்களிப்பு

சங்ககிரி:விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து வாக்களித்தார்.

Update: 2024-04-19 16:03 GMT

வாக்களிக்க வந்த ஓட்டுநர்

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் விபத்தில் காயமடைந்த அவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து வாக்களித்தார்.

அக்கமாபேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமமூர்த்தி மகன் செந்தில்குமார் (42). இவர் வெளி மாநிலத்திற்கு லாரியை ஓட்டிச்செல்லும் போது சாலை விபத்தில் காயமடைந்தார். காயமடைந்த அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த அவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென அவரது குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவரது குடும்பத்தினர் சங்ககிரி தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமையாளர் பிரசாந்த் நடக்க முடியாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால் இலவசமாக வாகனத்தில் அழைத்து செல்லப்படும் என பதிவிட்டுள்ளதை படித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் லாரி ஓட்டுநர் அவரது வாக்கினை செலுத்தினார். அவரது வாக்குரியைமை செலுத்த உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தது வாக்குச்சாவடியில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Tags:    

Similar News