கண்டன்விளையில் அச்சு முறிந்து நடுரோட்டில் நின்ற லாரி

கண்டன்விளையில் அச்சு முறிந்து நடுரோட்டில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-05-29 14:14 GMT

கண்டன்விளையில் அச்சு முறிந்து நடுரோட்டில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் நோக்கி கனிம வளம் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.  கண்டன் விளை அடுத்த மடவிளாகம்  சந்திப்பில் வந்த போது லாரியின்  இடது பக்கம் முன் அச்சு திடீரென உடைந்தது.        இதனால் டயர் கழந்து நகர முடியாமல் லாரி நடுரோட்டில் நின்றது. இதை அடுத்து இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.        தகவல் அறிந்து சம்பவ இடம்  சென்ற இரணியல்  போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர்.    

தொடர்ந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மட விளாகம் சந்திப்பிலிருந்து குருந்தன்கோடு வழியாக திருப்பி விடப்பட்டது. திங்கள் நகர் செல்லும் வாகனங்களை வில்லுக்குறி வழியாக திருப்பி விட்டனர். பின்னர் லாரியை  நீண்ட நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அச்சு முறிந்து நடுரோட்டில் நின்ற கனிம வள லாரியால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவது பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News