முதியவருக்கு கொலை மிரட்டல்

மண்மங்கலம் அருகே தென்னை மரம் வெட்டிய முதியவரை அரிவாளை கட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-10 14:52 GMT

தகராறு

 கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வாங்கிலியப்பன் (85). விவசாயி. மின்னாம்பள்ளியில் இவருக்கு தென்னந்தோப்பு உள்ளது. மே 7ஆம் தேதி தென்னந்தோப்பில் காலை 10:15 மணி அளவில், தென்னை மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்கிற துரைசாமி (53), என்பவர், வாங்கிலியப்பரிடம் தென்னை மரத்தை வெட்டுவது தொடர்பாக தகராறு செய்துள்ளார். மேலும், வாங்கிலியப்பரை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, அருவாளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement

இந்த சம்பவத்தில் வாங்கிலியப்பருக்கு காது, தோள்பட்டை ,முதுகு பகுதியில் காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாங்கிலியப்ப கவுண்டர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று அன்றைய தினமே விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணையின் முடிவில் நேற்று கந்தசாமி என்கிற துரைசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News