பால சுவற்றில் தூங்கியவர் தவறி விழுந்து பலி
பால சுவற்றில் தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-07 14:04 GMT
கோப்பு படம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அத்திப்பாளையம் அருகே உள்ள வல்லக்குளத்து பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி . இவர் ஜூன் 1-ம் தேதி இரவு 9 மணி அளவில், நொய்யல் ஆற்று பாலசுவற்றில் படுத்து உறங்கி உள்ளார். அயர்ந்து உறங்கும் போது பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் காயமடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.