பயணியை போல் நடித்து பணம் களவாட முயன்ற நபர் கைது
பயணியை போல் நடித்து, சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு பணம் களவாட முயன்ற நபர் கையும் களவுமாக கைது.;
Update: 2023-12-16 10:53 GMT
பணம் களவாட முயன்ற நபர் கைது
பயணியை போல் நடித்து பேருந்து வரும் நேரம் கேட்டு சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு பணம் களவாட முயன்ற நபர் கையும் களவுமாக கைது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் வயது 52. இவர் டிசம்பர் 15ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, அணியாப்பூர், தளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி வயது 43 என்பவர், சிவகுமாரிடம் கரூருக்கு பேருந்து இப்போது வருமா? என கேட்டு, அவரது கவனத்தை திசை திருப்பி அவரது சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு பணத்தை களவாட முயன்றுள்ளார். சட்டென சுதாரித்த சிவகுமார் பொன்னுச்சாமியை கையும் களவுமாக பிடித்தார். மேலும், இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் களவாட முயன்ற பொன்னுச்சாமியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர்.