குறி பார்ப்பதுபோல் நடித்து நகை திருடியவர் கைது
Update: 2023-11-26 06:10 GMT
கருப்பையா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவரது வீட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் குறி பார்ப்பதாக தெரிவித்து வந்துள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்ட நிலையில் அவர் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த தங்க தோடை அவர் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கோவிந்தம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு seythu அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்