12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
திருட்டு மற்றும் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ளார்.
Update: 2024-06-27 13:06 GMT
வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ராஜா (39). இவர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அடிதடி தகராறு, திருட்டு தொடர்பாக 3 வழக்குகள் உள்ளன. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் தூசி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இவர் மீதான வழக்குகள் முடிவடைவதற்கு முன்பு தலைமறைவாகினார்.
அவரை பிடிக்க வேலூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்பேரில் அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராஜா பள்ளிகொண்டா அருகே ஐதர்புரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து அவர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த ராஜாவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.