ராசிபுரம் அருகே ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு
ராசிபுரம் அருகே ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு..
Update: 2024-07-15 06:45 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி இந்திரா நகர் பகுதியை கந்தசாமி(57) கட்டிடம் மேஸ்திரி ஆக பணியாற்றி வருகிறார். இவர் தனியாக வாசித்து வரும் நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு சிகிச்சையில் இருந்த போது மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனை மேற்கொண்டதில் ஸ்கார்ப் டைபஸ் (SCRUP TYPHUS) எனும் காய்ச்சலால் பாதிப்புக்கு உளாகியதாக கூறப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை பெறாமல் கந்தசாமி அங்கிருந்து சென்றார். மேலும் காய்சல் மீண்டும் அதிகரிக்கவே சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கந்தசாமி உயிரிழந்துள்ளார். தற்போது ஸ்க்ரப் டைபஸ் எனும் காய்ச்சலால் உயிரிழந்த கந்தசாமி வசிக்கும் பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடு வீடாக சென்று வாலி, தொட்டி,பேரல், பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள நீர்களை கீழே ஊற்றியும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து முகாமில் இருந்த மருத்துவர் கூறுகையில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வகை காய்ச்சலானது மழை காலங்களில் பரவுவதாகவும் முறையாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என தெரிவித்தனர்.