கிளாம்பாக்கத்தில் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரம் அறிவிப்பு

கிளாம்பாக்கத்தில் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரம் அறிவிப்பு

Update: 2024-01-30 09:55 GMT

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன. இதில் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-நடைமேடை எண் 1:-கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார் தாண்டம். நடைமேடை எண் 2:-உடன்குடி, கருங்கல், குட்டம், கன்னியாகுமரி, குலசேரகம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். நடைமேடை எண் 3:-ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவகோட்டை, தொண்டி, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன், ஒப்பிலன். நடைமேடை எண் 4:-கம்பம், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, பட்டுக்கோட்டை, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, மன்னார்குடி.நடைமேடை எண் 5:-அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், நன்னிலம், நாகப்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேளாங்கண்ணி, கும்பகோணம். நடைமேடை எண் 6:- ஈரோடு, ஊட்டி, எர்ணாகுளம், கரூர், குருவாயூர், கோவை, சேலம், திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம். நடைமேடை எண் 7:-செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், மேல்மலையனூர், வந்தவாசி. நடைமேடை எண் 8:-அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், விழுப்புரம், ஜெயங்கொண்டம். நடைமேடை எண் 9:-கடலூர், காட்டுமன்னார் கோல், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, புதுச்சேரி, வடலூர், விருத்தாசலம்.
Tags:    

Similar News