சங்கரன்கோவில் மாபெரும் கையெழுத்து இயக்கம்
சங்கரன்கோவில் திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-21 13:32 GMT
சங்கரன்கோவில் திமுக
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக சமூகசெயற்பாட்டாளர் சுந்தரவல்லி கலந்துகொண்டார். திமுக மாவட்ட பொருளாளர் இல,சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.