தனியார் திருமண மண்டபம் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயம்
சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.;
Update: 2024-05-21 07:28 GMT
சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே வாழவந்தான்கோட்டை பொன்நகரைச் சேர்ந்தவர் 32 வயதான முருகானந்தம். கடந்த 18 ம் தேதி மாலை இவர் தனது மோட்டார் பைக்கை சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நிறுத்திவிட்டு சொந்த வேலையாக வெளியே சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது .மர்ம நபர்கள் யாரோ மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம் பல்வேறு இடங்களில் தனது மோட்டார் பைக்கை தேடி உள்ளார் ஆனால் எங்கு தேடியும் மோட்டார் பைக் கிடைக்கவில்லை. இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் முருகானந்தம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.