பிஎன்எஸ் 106 என்ற புதிய சட்ட மசோதா - திரும்பப் பெற வலியுறுத்தி மனு

பிஎன்எஸ் 106 என்ற புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு

Update: 2024-01-09 07:27 GMT

பிஎன்எஸ் 106 

ஓட்டுநா்களுக்கு எதிரான பிஎன்எஸ் 106 என்ற புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநா்கள், அமைப்புச்சாரா தொழிலாளா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். அப்போது மாவட்டத் தலைவா் சுரேஷ் கூறியதாவது: ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட பிஎன்எஸ் 106 (ஹிட், ரன்) புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஓட்டுநா்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். வெளிமாநிலம் செல்லும் ஓட்டுநா்களுக்கு, மக்களவைத் தோதலில் தபால் வாக்குரிமை வழங்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News