பாலமேடு சாத்தியார் அணைக்கு புதிய தார் சாலை வரப்போகுது!

சாத்தியார் அணை பகுதியில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.;

Update: 2024-03-02 03:43 GMT

 சாத்தியார் அணை பகுதியில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ள இந்த சாத்தியார் அணை ஓரமாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு அணைக்கு பின்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து இயங்கி வந்தது. இந்த தார் சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் சில மீட்டர் தொலைவு வனச்சரகத்திற்கு உட்பட்டு உள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தார் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து இயங்கி வந்த நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இது தொடர்பாக அப்பகுதி கிராம பொதுமக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களின் முழு முயற்சியால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உரிய அனுமதி பெற்று தற்போது ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 1.2 கிலோமீட்டர் தொலைவில் 3.75 மீட்டர் அகலத்தில் சாத்தியார் அணை முதல் மைல் கல் வரை புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யூனியன் ஆணையாளர்கள் கலைச்செல்வி, பிரேமராஜன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு,   பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News