விழுப்புரம் அருகே புதியதாக நடப்பட்ட மின்கம்பம் விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம் அருகே புதியதாக நடப்பட்ட மின்கம்பம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே இருந்து குடிநீர் தொட்டியின் மோட் டார் கொட்டகைக்கு உயரழுத்த மின்கம்பிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக குடியிருப்புகளுக்கு செல்லும் பிர தான சாலை வழியாக ஏற்கனவே செல்லும் மின்சார லைன் கம் பங்களை மாற்றி, அதன் வழியே உயரழுத்த மின் கம்பிகளை பொருத்துவதற்காக மின் கம்பங்களும் புதிதாக நடப்பட்டு வரு கிறது.
இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் கோவில் அருகே புதியதாக கான்கிரீட்டால் ஆன மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டனர். அந்த மின்கம்பம் நடப்பட்ட சில மணி நேரத்திலேயே அடிப்பகுதி திடீரென உடைந்து மின்கம்பம், நடுரோட்டிலேயே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதைய றிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து ஊருக்குள்,
உயரழுத்த மின் கம்பிகளை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள், மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள் ளனர். அதில் தரமில்லாத மின் கம்பத்தை நட்டதால் சிறிது நேரத்திலேயே உடைந்து விழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.