ஒடுகத்தூர் சந்தையில் ஒரு ஜோடி ஆடு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒடுகத்தூர் சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2024-06-15 13:39 GMT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒடுகத்தூர் சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடந்தது.


வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் வாரந்தோறும் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதே வேளையில் திருவிழா, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட நாட்களில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பதும், புரட்டாசி மாதங்களில் சில லட்சங்களுக்கு மட்டுமே விற்பனை நடப்பதும் உண்டு. நாளை மறுநாள் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கடந்த வாரமே ஒடுகத்தூர் சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் காலை முதலே ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.ஒரு ஆட்டின் விலை முன்பைவிட கிடு கிடுவென உயர்ந்து ரூ.24 ஆயிரத்துக்கும், ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.45 முதல் 50 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது.
Tags:    

Similar News