ஆத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு!
ஆத்தூர் அருகே சிலோன் காலனி பகுதி 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயிலை தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிலோன் காலனியி் வசித்து வருபவர் கணேசன் இவரது விவசாயத் தோட்டத்தில் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் வனப் பகுதியில் இருந்து இறை தேடியும் தண்ணீர் தேடி வந்த மயில் தவறி கிணற்றில் விழுந்துள்ளது. ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த கணேசன் கிணற்றில் சென்று பார்க்கும் போது மயில் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அறிந்த விவசாயி உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டனர்.பின்னர் விவசாயி துரிதமாக வந்து மயிலை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார். உயிருடன் பிடித்த மயில் ஆத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.