நெம்மேலி குடிநீர் ஆலை வளாகத்தில் மயானத்திற்கு செல்ல சுற்றுச்சுவர்
நெம்மேலி குடிநீர் ஆலை வளாகத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 13:12 GMT
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சியில், பேரூர் உள்ளது. இப்பகுதி மயானம், கிழக்கு கடற்கரை சாலையின் கிழக்கு பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. மயான வளாகத்தையும் உள்ளடக்கிய 85 ஏக்கர் இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தின்,
கடல்நீரிலிருந்து, ஒரு நாளில் 45 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும், புதிய ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆலை வளாகத்தின் மைய பகுதியில் மயானம் உள்ளது. மயான வளாகத்தால், ஆலைக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்க்க, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து மயானம் செல்லும் பாதை, மயான வளாகம் ஆகியவற்றை,
ஆலை வளாகத்திலிருந்து பிரிக்கும் வகையில், தனி சுற்றுச்சுவரை குடிநீர் வாரியம் அமைத்து உள்ளது.