மேலப்பாளையத்தில் மர்மமாக இறந்து கிடந்த நபர்
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-21 05:18 GMT
மர்ம மரணம்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று (ஏப்.20) இரவு பிடி காலனி செல்லும் வழியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த மரணம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.