கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது.

Update: 2023-11-10 03:30 GMT

மோகன்ராஜ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா சோழவாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மோகன்ராஜ் என்கிற மோகன் (31). இவர் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 21.9.2023 அன்று மணம்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மோகன்ராஜை அரகண்டநல்லூர் போலீசார் கைதுசெய்து அவரிடமிருந்த 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு போதைப்பொருள் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். இதையடுத்து மோகன்ராஜை போதைப்பொருள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்பேரில் மோகன்ராஜை நேற்று அரகண்ட நல்லூர் போலீசார், போதைப்பொருள் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News