வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர்- விரக்தியில் தற்கொலை

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-16 01:22 GMT

வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர் விரக்தியில் தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, தொக்குப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 50. இவருக்கு அண்மைக்காலமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இதற்காக பலமுறை சிகிச்சை பெற்றும், அவருக்கு எவ்வித பலனும், முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தி ஏற்பட்ட பழனிச்சாமி, டிசம்பர் 12ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது மனைவி சரஸ்வதி வயது 41 என்பவர், உடனடியாக தனது கணவன் பழனிச்சாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி சின்னதாராபுரம் காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.

Tags:    

Similar News