முன்விரோதத்தால் பக்கத்து வீட்டுகாரரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம்,பாலூர் பகுதியில் முன்விரோதத்தால் பக்கத்து வீட்டுகாரரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Update: 2024-04-24 09:51 GMT
சிறை தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (42). தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். அரவிந்துக்கும் இவரது வீட்டு அருகில் வசித்து வரும் விஜயன் மற்றும் சுனில் ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி திப்பிரமலை ஊராட்சி அலுவலகத்தின் முன்வைத்து விஜயன் மற்றும் சுனில் ஆகியோர் சேர்ந்து அரவிந்தை சரமாரியாக தாக்கினர்.

இதில் காயமடைந்த அரவிந்த் கருங்கல் போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விஜயன் மற்றும் சுனில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இரணியில் நீதிமன்ற நீதிபதி அமிர்தீன் விஜயனுக்கு 3 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தார். சுனிலுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 1500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News