சாராயம் விற்பனை செய்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது !
நாகை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது, சிறப்புடன் செயல்பட்ட கீழ்வேளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள், இனி கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பரிந்துரையின் படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கிஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் கள்ளச்சாரய கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட நாகை மாவட்டம் சித்தல் ஜெகவீரபாண்டியன் முனிஸ்வரி (34) என்பவரை கீழ்வேளூர் காவல் துறையினர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.