திருப்பூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் கைது. 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்...

Update: 2024-06-11 11:57 GMT

சீல் வைத்த அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வின்போது குட்காக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதனை விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் லட்சுமிநகர் மில்லர் ஸ்டாப் அருகில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் அதிகாரிகள் தென்னம்பாளையம், மும்மூர்த்தி நகர், முருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் புகையிலை விற்பனை செய்த மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 கடைகளுக்கு தலா 25 ஆயிரம் வீதம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News