கால் வலியால் அவதிப்பட்டு வந்தவர் விரக்தியில் கண்ணு வலி கிழங்கு சாப்பிட்டு தற்கொலை

கால் வலியால் அவதிப்பட்டு வந்தவர் விரக்தியில் கண்ணு வலி கிழங்கு சாப்பிட்டு தற்கொலை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-09 11:26 GMT
கால் வலியால் அவதிப்பட்டு வந்தவர் விரக்தியில் கண்ணு வலி கிழங்கு சாப்பிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளி ஊராட்சியில் உள்ள குப்பமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது 58. இவர் கடந்த இரண்டு வருடங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வந்தார். ஆயினும் குணமாகவில்லை. இதனால், விரக்தி அடைந்த நாகராஜன் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அரவக்குறிச்சியில் அதிகம் விளையும் கண்வலி கிழங்கு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த நாகராஜனின் மனைவி கனகா, தனது கணவனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நாகராஜன், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 8ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கனகா அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த நாகராஜனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Tags:    

Similar News