தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட காட்சி

திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

Update: 2024-03-12 12:23 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி வாகனம், செல்போன், விபத்து காப்பீடு என மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட சேர்மன் சூரியகுமார், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் விஜயா அருணாசலம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஜனார்த்தன் நன்றி கூறினார்..

Tags:    

Similar News