கணவரை இழந்த கர்ப்பிணி கருணை அடிப்படையில் வேலை கேட்க ஆட்சியரிடம் மனு
சொத்து பிரச்சினை காரணமாக கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் வேலை கேட்டு பட்டதாரி பெண் மனு அளித்தார்;
Update: 2024-02-19 09:22 GMT
ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் கடந்த டிசம்பர் மாதம் சொத்து பிரச்சனை காரணமாக உறவினர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 7 மாத கர்ப்பிணியான இவர் 3 1/2 வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கலைச்செல்வி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் அந்த மனுவில் பி.காம் பட்டதாரியான இவர் வாழ்வாதாரம் இழந்து ஆதரவின்றி தவித்து வருவதால் கருணை அடிப்படையில் அரசு வேலை ஒதுக்கிட உதவ வேண்டும் எனக் கூறி மனு அளித்தார்