விபத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் தனியார் நிறுவனம்

கரூர் அருகே விபத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டது.

Update: 2024-04-19 09:11 GMT

க ரூரிலிருந்து வேடசந்தூர் நோக்கி ஏப்ரல் 16ஆம் தேதி காலை பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட தடா கோவில் பிரிவு அருகே சென்ற போது, லாரி டிரைவர் கவன குறைவால், லாரி சென்டர் மீடியனைத் தாண்டி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

எப்போதும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் சூழலில் இந்த லாரி சென்டர் மீடியனைத் தாண்டி மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டிருந்ததால், லாரி அதை தாண்டி செல்ல முடியாமல் கவிழ்ந்து, தெய்வாதீனமாக யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.

கவிழ்ந்த லாரியில் இருந்து பஞ்சுகளை அப்புறப்படுத்தி விட்டு, பின்பு தனியார் நிறுவனத்தின் கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News