விடியா தி மு க அரசை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

போதைப் பொருள்களின் புகலிடமாக தமிழகம் மாறி வருவதாக கூறி தேனியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-04 07:24 GMT

 கண்டன ஆர்ப்பாட்டம்

போதைப் பொருள்களின் புகலிடமாக தமிழகம் மாறி வருவதாக கூறி தேனியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம். விடியா தி.மு.க அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதைப் பொருட்களின் புகலிடமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா தி மு க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட கிழக்கு மேற்கு அதிமுக சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பங்களா மேட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்களான முருக்கோடை ராமர், எஸ் டி கே ஜக்கையன், தேனி நகர தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News