நன்னிலம் அருகே ரேஷன் கடை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
நன்னிலம் அருகே ரேஷன் கடை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
தற்கொலை செய்து கொண்ட ஊழியர்
நன்னிலம் காவல் சரகம் பெருமாள் கோவில் தெருவினை சேர்ந்தவர் தமிழழகன். இவர் இந்த பகுதியில் கூட்டுறவு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி அவர் பின்பு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை அவரது செல்போனும் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடி வந்தனர்.
இந்நிலையில் நன்னிலத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மூலங்குடி பகுதியில் தமிழழகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் மன உளைச்சலையில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் இது குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.